Monday, August 18, 2008

வாழ்க வளமுடன்!

நிறைய எழுத ஆசை தான். ஆனால் எப்படி அதை சுவாரசியமாக எழுதுவது. நான் தினமும் ரசிக்கும் விசயங்களைக் கூட எழுத்தில் கொண்டு வர இயலாததை நினைத்து வருந்துகிறேன். ஆனாலும் இந்த வலைப்பூக்களை எல்லாம் வாசிக்கும் போது மீண்டும் எழுத வேண்டும் என்ற வேதாளம் மண்டைக்குள் கும்மியடிக்கும். எனவே முயற்சி செய்யலாம் என்று முடிவெடுத்தேன்.

வாழ்க வளமுடன்! என்னைக் மிகவும் கவர்ந்த வார்த்தை. இதை ஒரு இயக்கமாக ஆரம்பித்தவர் வேதாத்திரி மகரிஷி. அவரைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் தெரியதவர்களுக்காக. அவர் குண்டலினி யோகம் என்பதை பற்றி அராய்ந்து அதை எளிமைப் படுத்தியவர். கோவையருகே ஆழியாறு என்னும் இடத்தில் அறிவுத்திருக் கோயில் என்ற ஆசிரமத்தை அமைத்து இந்த யோகப் பயிற்சியை நிறுவியவர். எனக்கு ஏற்பட்டுள்ள மறதியில் கூகிலில் தான் அந்த இடத்தின் பெயரை தேடி எடுத்தேன். மறதிக்கான காரணத்தை பிறகு சொல்கிறேன்.

2 comments:

Unknown said...

nanum trichythan. neenga enna pannureenga

கார்க்கிபவா said...

வாழ்க வளமுடன்