இந்த ப்ளாக் தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகி விட்டது ஒன்றும் எழுத வில்லை. சரி நமக்கு ஏதோ கொஞ்சமாக வரும் ஹைக்கூ மட்டும் எழுதலாம் என்று இருக்கிறேன். இன்னும் எவளவு காலம் வண்டி ஓடுது என்று பார்போம்.
வாழ்க வளமுடன் என் நண்பன் நெல்சன் அறிமுகம் செய்து வைத்தான். அவனை போன்ற இன்னொருவரை நான் இது வரை பார்கவில்லை இனியும் பார்க்கமுடியும் என்ற நம்பிக்கை இல்லை. நல்ல புத்தி கூர்மை உடையவன். பேசுவது உண்மையா பொய்யா என்று கண்டுபிடிக்கவே தாவு தீர்ந்து விடும். மாப்பு காலையில் வா இந்த பயிற்சிக்கு போவோம் நல்ல நியாபக சக்தி கிடைக்கும் அப்புறம் எக்ஸாம் எல்லாம் நமக்கு ஜூ ஜு பி என்றான். போய் தான் பார்ப்போமே என்று ஒரு முகூர்த்த வேளையில் அதி காலையில் தில்லை நகரில் உள்ள கி. ஆ. பெ. விஸ்வநாதன் பள்ளிக்கு கூடிக் கொண்டு போனான். சுந்தர் ராஜ் என்ற ஒரு ஆசிரியரிடம் அறிமுகப் படுத்தினான் அவர் ரொம்ப நல்லவர். இன்று கண்டிப்பாக மிக பெரிய பொறுப்பில் இருப்பார் என்பதில் வியப்பில்லை ஆனால் அவரிடம் கற்று விட்டு இன்று விட்டு விட்டு இருக்கும் நிலையை கண்டு வருந்துகிறேன். ஆனால் அங்கு சென்ற பிறகு நான் மேலும் மேலும் எனக்கு மிகவும் பிடித்த "தன்னை போல் பிறரை நேசி" என்ற இயேசுவின் கட்டளையை கடை பிடிக்க ஆரம்பித்தேன்.
முதலில் அந்த தியானம் எனக்கு மிக பிடித்து இருந்தது. ஏன் என்றால் எந்த கடவுளும் இல்லை உன் உயிரை கொண்டே நீங்கள் தியானம் செய்வர்கள் என்று ஏன் குரு சொன்னார். அந்த கால கட்டத்தில் தான் நான் புகை பிடிக்க ஆரம்பித்து இர்ருந்தேன் அதற்கு முன்பு வரை கருமம் டா எப்படி தான் புகையை போய் சாபிடுகிறர்களோ என்ற மமதையில் இருந்தேன்.
என் குரு சொன்னார் புகை பிடித்தால் சரியாக தியானிக்க முடியாது என்று அது உண்மையில் சரி தான். அவர்கள் சொல்லி தந்த தியானத்தை விட உடற் பயிற்சி மிகவும் நன்றாக இருக்கும். காலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கும். நான் ஐந்து மணிக்கு எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஆரோக்கிய மாதா ஆலயத்திற்கு சென்று விட்டு அங்கு ஆறு மணிக்கு ஆஜராகிவிடுவேன். எழு மணிக்கு அங்கு என் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவனை பார்த்தேன் அவன் கணக்கு பாடம் நல்லா செய்வான் எல்லாம் இந்த பயிற்சியின் முயற்சியே என்று எனக்கு நம்பிக்கை ஊட்டினான்.
பிறகு அவர்கள் சொல்லிய ஒன்று எனக்கு மிகவும் பிடித்திருந்தது எதிரிகளையும் வாழ்த்த சொன்னார்கள். அடுத்தது நாம் யாரையும் நம்மை நோக்கி பார்க்க வைக்க முடியும் என்று சொன்னார்கள். அது உண்மை என்று பின்பு தெரிந்து கொண்டேன். ஆனால் நம்ம நண்பர் நெல்சன் எதையே மூன்று மாதத்திற்கு மேல் செய்யும் பழக்கமில்லாதவன். அவன் அடுத்து ஜிம் சேர்ந்தான். ஆனால் நான் போக வில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment